விலங்குகளை சித்ரவதை செய்தால் 5 ஆண்டு சிறை.. ரூ.75 ஆயிரம் அபராதம்.. விரைவில் வருகிறது புதிய சட்டம்.!

விலங்குகளை சித்ரவதை செய்தால் 5 ஆண்டு சிறை.. ரூ.75 ஆயிரம் அபராதம்.. விரைவில் வருகிறது புதிய சட்டம்.!;

Update: 2021-02-06 13:44 GMT

செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை துன்புறுத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது போன்றவர்களை தண்டிப்பதற்காக மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது. இதற்கு முன்பு வரை விலங்குகளை சித்ரவதை செய்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தால் மக்கள் யாரும் திருந்துவதாக தெரியவில்லை. அதற்கு மாற்றாக குற்றங்கள் அதிகரிக்கவே தொடங்கியுள்ளது.

இது போன்ற சட்டத்தால் தண்டிக்க முடியாது என்ற முடிவு எடுத்த மத்திய அரசு விலங்குகள் சட்டத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. புதிய சட்டத்தின்படி விலங்குகளை காயப்படுத்துவது அல்லது கொல்வது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதமும், 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இது போன்ற சட்டத்தை கடுமையாக்கினால்தான் விலங்குகளை யாரும் துன்புறுத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News