50% வரியை சமாளிக்க புதிதாக வரப்போகும் சிறப்பு திட்டம்!! மாற்று வழியை தீர்வு செய்யும் மத்திய அரசு!

Update: 2025-09-07 05:21 GMT

 இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இது பெரும்பாலும் ஏற்றுமதி செய்யும் தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஏற்றுமதியையே நம்பியிருக்கும் பல குடும்பங்களுக்கு இது வருத்தத்தையும் அளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் அவர்களின் வருத்தத்தை போக்கும் வகையில் 50 சதவீத வரியை சமாளிக்கும் விதத்தில் கொரோனா போன்ற காலகட்டத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் போல இதற்கும் சில சிறப்பு சலுகைகள் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக ஜவுளித்துறை சங்கங்களின் சார்பாக நிர்மலா சீதாராமன் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஜவுளித்துறை ஆனது 30 சதவீதத்திற்கும் மேலாக அமெரிக்காவை ஏற்றுமதியில் நம்பியிருப்பதாகவும், அப்பொழுது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால் பெரும் நெருக்கடி ஜவுளித்துறைக்கு ஏற்படுகிறது என்று தெரிவித்ததை தொடர்ந்து மத்திய அரசு இதற்கான மாற்று வழியை திட்டமிடவுள்ளது.

தொழில்துறையை பாதுகாப்பதற்காக ஜிஎஸ்டி வரியை குறைத்து அதில் உள்ள குறைபாடுகளை தீர்த்து கடன் மற்றும் வட்டி சலுகைகள் மற்றும் தவணை செலுத்துவதில் கால அவகாசம் கொடுத்தல் போன்றவற்றில் நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும், ஏற்றுமதி பொருள்களை வேறெங்காவது அனுப்பவோ அல்லது தீர்வு காணவோ அரசு விரைவில் தீர்வு காணும் என்று சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News