கடும் போட்டிகளுக்கு நடுவில் 5G ஏலம் - தொலைத்தொடர்பு துறையின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் இந்தியா!

இந்தியாவில் அதிவேக இணையதள இணைப்பு வழங்குவதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

Update: 2022-07-28 10:42 GMT

இந்தியாவில் அதிவேக இணையதள இணைப்பு வழங்குவதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, மிட்டலின் பாரதி ஏர்டெல் ,வோடபோன்- ஐடியா மற்றும் அதானி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் நாளில் ரூபாய் 1.45 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏலம் கேட்டன.

குறிப்பாக 3,300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுப்பதற்கு கடும் போட்டி நிலவியது .இதன் தொடர்ச்சியாக நேற்று 2-வது நாள் ஏலம் நடந்தது. இதிலும் 4 நிறுவனங்களும் போட்டி போட்டு ஏலம் எடுத்தன.

இதனால் 1.49 லட்சம் கோடி அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் நல்ல போட்டி இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது .அனைத்து துறைகளிலும் சிறப்பான போட்டி இருக்கிறது. ஒன்பதாவது சுற்று முடிவில் இதுவரை ரூ.1,49,454 கோடி மதிப்புள்ள எங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மற்ற மூன்று நிறுவனங்களைவிட அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தான் மிக தீவிரமாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தனர் .



Similar News