இவ்வளவு நிலத்தடி நீர் சுரண்டலா... மோடி அரசின் மாஸ்டர் பீஸ்... வந்தது ஜல் ஜீவன் மிஷன்!

2023 வரை சுமார் 60 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2023-04-05 02:15 GMT
இவ்வளவு நிலத்தடி நீர் சுரண்டலா... மோடி அரசின் மாஸ்டர் பீஸ்... வந்தது ஜல் ஜீவன் மிஷன்!

நாட்டின் மாறும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) மற்றும் மாநில அரசுகளால் அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படுகிறது. 2020 மதிப்பீட்டின்படி, நாட்டில் உள்ள மொத்த 6,965 மதிப்பீட்டு அலகுகளில் 15 மாநிலங்களில் உள்ள 1,114 யூனிட்கள் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் எடுப்பதில் ''அதிகப்படியான சுரண்டப்பட்டவை'' என வகைப்படுத்தப் பட்டுள்ளன. அதாவது அதிகப்படியான நிலத்தடி நீர் மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பணக்காரர்கள் தங்களுடைய பணத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை அதிகமாக சுரண்டி இருக்கிறார்கள்.


இதை நிறுத்துவதற்காக கொண்டு வந்த ஒரு மிகப்பெரிய திட்டம்தான் ஜல்ஜீவன் மிஷன். நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பமும் குழாய் நீர் இணைப்பு மூலம் குடிநீரை உறுதிசெய்யும் வகையில், ஆகஸ்ட் 2019 முதல், இந்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்துகிறது. ஆகஸ்ட் 2019 இல் ஜல் ஜீவன் மிஷன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், 3.23 கோடி கிராமப்புற குடும்பங்கள் குழாய் நீர் இணைப்புகளைக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.


ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2019 நிலவரப்படி நாட்டில் 3.23 கோடி ஊரக வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29.03.2023-ன்படி மேலும் 8.36 கோடி ஊரக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 19.43 கோடி ஊரகப்பகுதியில் உள்ள வீடுகளில் 11.59 கோடி (59%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News