64% பேர் வாயையும், மூக்கையும் மறைக்கிற விதமாக முக கவசம் அணிவதில்லை : அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வின் முடிவுகள்.!

Update: 2021-05-21 12:46 GMT

உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மக்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை கொடுப்பதன் மூலமாக மட்டும் தான் இந்த தொற்றுநோயை முழுமையாக தவிர்க்க முடியும். நாட்டில் கொரோனா தொற்று மிக கொடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய சூழலில் அனைத்து மக்களும் தங்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசு மேற்கொள்ளும் மற்றும் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.


அந்த வகையில் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிவது என்பது ஒரு இன்றியமையாத விஷயம் ஆகும். ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் முடிவு என்ன சொல்கிறது? என்றால், நாட்டில் சுமார் 50 சதவீத மக்கள் இன்னும் முக கவசம் அணிவது இல்லை என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனை விகிதமானது, பிப்ரவரி மாதத்தில் கடந்த 12 வாரங்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது தற்போது உள்ள இரண்டு வாரங்களாக தான் பாத்துட்டு எனக்கு சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. கடந்த மாதம் 29ம் தேதி நிலவரப்படி, பாதிப்பு விகிதம் குறைவாக இருப்பதாக 210 மாவட்டங்கள் கூறியது. 


ஆனால் மே 19 தேதி இந்த எண்ணிக்கை 303 மாவட்டங்களாக அதிகரித்துள்ளன. 7 மாநிலங்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு விகிதம் உள்ளது. 22 மாநிலங்களில் 15 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு விகிதம் இருக்கிறது. 50 சதவீத மக்கள் இப்போதும் முக கவசம் அணிவதில்லை என்றும், 64% பேர் வாயையும், மூக்கையும் மறைக்கிற விதமாக முக கவசம் அணிவதில்லை என்றும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தங்களை தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவதும், அந்த முக கவசம் மூக்கையும், வாயையும் மறைக்கிற விதத்தில் இருக்க வேண்டும் என்பதுவும் தான் இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்ட தகவல்.

Tags:    

Similar News