7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் ஜனாதிபதிக்கு வேண்டுகோள்.!

7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் ஜனாதிபதிக்கு வேண்டுகோள்.!

Update: 2021-02-19 12:21 GMT

உத்தர பிரதேச மாநிலம், அம்ரோகா நகரை சேர்ந்தவர் ஷப்னம், இவர் சலீம் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் திருமணத்திற்கு ஷப்னம் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஷப்னம், காதலன் சலீம் உடன் சேர்ந்து கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கில் ஷப்னம் மற்றும் சலீம் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து சிறையில் உள்ள ஷப்னம் தூக்கு தண்டனையை குறைக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி நிராகரித்தார். இதனையடுத்து ஷப்னத்தை விரைவில் தூக்கிலிடுவதற்காக சிறைத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சப்னமின் மகன் முகமது தாஜ், தனது தாயாரின் மரண தண்டனையை குறைக்கும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றி முகமது தாஜ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எனது தாயை நேசிக்கிறேன். அவருடைய தூக்கு தண்டனையை ஜனாதிபதி குறைப்பாங்கனு நம்பிக்கை இருக்கு என்று தெரிவித்தான்.
 

Similar News