குஜராத் வேட்டையில் சிக்கிய 350 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் - பாகிஸ்தான் கைவரிசையா என தீவிர விசாரணை
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முத்ரா துறைமுகத்திலிருந்து 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 70 கிலோ போதைப்பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முத்ரா துறைமுகத்திலிருந்து 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 70 கிலோ போதைப்பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முத்ரா துறைமுகத்தில் இன்று போதை பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்க ரகசிய தகவல் கிடைத்தது, இதனால் துறைமுகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கண்டைனர் பகுதியை தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு கண்டெய்னரில் 70 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதை பொருள் இருப்பதை தீவிரவாத தடுப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.
தீவிரவாத தடுப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதால் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள் அளவு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும் இது பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்டதா அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.