நாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் - குடியரசு தலைவர் இன்று மாலை உரை!

நாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் - குடியரசு தலைவர் இன்று மாலை உரை!

Update: 2021-01-25 16:51 GMT

நமது தேசியக் கொடி வானத்தில் உயர்ந்து பறப்பதை காட்டிலும் அழகான மற்றும் பெருமையான தருணம் வேறு என்ன இருக்கிறது? தேசிய கீதமான 'ஜன கண மன' வை நாம் கேட்கும் போதெல்லாம் நாட்டுபற்று நம்முள் எழும்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாம் இந்திய நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. 

72-வது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் நாட்டு மக்களிடம் இன்று மாலை உரை நிகழ்த்துகிறார். நாடு முழுவதும் நாளை 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த நிலையில்,  இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். மாலை 7 மணிக்கு அவர் நிகழ்த்தும் உரை, அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுகிறது. அதோடு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, அந்தந்த பிராந்தி மொழிகளிலும் ஒளிபரப்பாகும். 

Similar News