75 நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள 75 கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!

Update: 2022-06-19 00:55 GMT

இந்தியா சுதந்திரம் அடைந்த எழுபத்தைந்தாவது ஆண்டை நினைவுகூரும் வகையில், 3 ஜூலை 2022 முதல் 75 நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள 75 கடற்கரைகளில் கடலோர தூய்மைப்படுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இந்த இயக்கத்தின் இலக்கு கடல் கடற்கரையிலிருந்து 1,500 டன் குப்பைகளை அகற்றுவதாகும், இது கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும்.

புவி அறிவியல் அமைச்சகத்தின் தலைமையகமான பிருத்வி பவனில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 

கடலோரப் பகுதிகளைத் தவிர, கடலோரப் பகுதிகள் அல்லாத பகுதிகளும், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களில் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்றார். 

75 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு 3 ஜூலை 2022 அன்று ஊடக உரையாடலுடன் தொடங்கும். நாடு முழுவதும் பிரபலங்கள் உள்ளூர் நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்திய கடலோர காவல்படையின் டிஜி, புவி அறிவியல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சியை நடத்துவதில் ஈடுபட்டுள்ள பிற அமைப்புகள் கலந்துகொண்டனர்.

Input From: swarajyamag 

Similar News