90% திறனுடன் கூடிய மலிவான விலை தடுப்பூசி : மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தகவல்.!

Update: 2021-06-18 12:58 GMT

இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகள் மட்டும் தான் பரவலாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில தடுப்பூசிகள் கடைசி கட்ட சோதனையில் இருந்து வருகின்றன. அவங்களுடைய சோதனைகளை நிறைவுசெய்த, பின்னர் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிய வருகிறது. அந்த வகையில் தற்போது பயோலாஜிக்கல்-E நிறுவனத்தின் தடுப்பூசியானது மிகவும் மலிவான விலையில் 2 டோஸ்கள் 250 ரூபாய்க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது ஏழை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல்-E நிறுவனத்தின் தடுப்பூசி கோவிட்டிற்கு எதிராக 90% திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அமைத்த பணிக்குழுவின் தலைவரான டாக்டர் N.K.அரோரா அவர்கள் இது பற்றிக் கூறுகையில், "அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்த நோவாக்ஸ் தடுப்பூசியை தற்பொழுது இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. இந்த மருந்து கோவிட்டை கட்டுப்படுத்துவதில் 90 சதவீத திறன் பெற்றது. இந்த தடுப்பூசி விலை குறைவாகவும் இருக்கும். இதே திறன் பெற்ற தடுப்பூசி ஒன்று இந்தியாவில் உருவாகி வருகிறது.


மேலும் பயாலாஜிக்கல்-E நிறுவனம் தயாரிக்கும் கோர்ப்வாக்ஸ் தடுப்பூசியானது அனைத்து வயதிற்கு ஏற்றதுடன் 90 சதவீத திறன் பெற்றது. இந்த மருந்து தற்போது 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்" என்று அவர் கூறினார். உருமாறிய கோவிட்டிற்கு எதிராகவும் இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக, பயாலாஜிக்கல்-E நிறுவனம் கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News