இந்திய விமானப் படையை மேலும் பலப்படுத்த 97 தேஜாஸ் ரக போர் விமானங்கள்!

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் ரகப் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-04 18:00 GMT

இந்திய விமானப் படையை மேலும் பலப்படுத்தும் வகையில் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜாஸ் மார்க் 1 ரகப்போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தானி ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 83 தேஜாஸ்மார்க்-1 ஏ போர் விமானங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 97 தேஜாஸ் மார்க் 1ஏ விமானங்களை வாங்குவதற்கு ₹ 1.15 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக விமானப்படை தளபதி வி.ஆர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "கூடுதல் 97 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை வாங்குவதன் மூலம் இந்திய விமானப்படையில் சேரும் தேஜாஸ் மார்க்-1ஏ ரக போர் விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும். இது தவிர 84 சுகோய் ம30 எம்.கே.ஐ போர் விமானங்கள் ரூபாய் 60,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும்" என கூறினார்.

SOURCE :DAILY THANTHI

Similar News