கர்நாடகாவில் புதியதாக ஒரு மாவட்டம்! 31வது மாவட்டம் இது தான்!

கர்நாடகாவில் புதியதாக ஒரு மாவட்டம்! 31வது மாவட்டம் இது தான்!

Update: 2021-02-09 10:26 GMT

திங்கட்கிழமை(பிப்ரவரி 8) இல் கர்நாடகாவில் விஜயநகராவை சேர்த்து 31 மாவட்டங்களாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்லாரியில் இருந்து ஒரு தனித் தனி மாவட்டத்தை அமைப்பதற்கான அரசாணைக்கு மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த புதிய மாவட்டத்துக்கு ஆறு தாலுகாக்கள் உள்ளன. ஹோஸ்பேட் அதன் தலைமை செயலகமாகவும் மற்றும் குடலிகி, ஹக்ரீபொம்மனா ஹல்லி, கோட்டூர், ஹூவினா ஹடகலி மற்றும் ஹார்ப்பனஹள்ளி உள்ளிட்டவை மாவட்டங்களின் பிற ஐந்து தாலுக்காகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் பல்லாரி மாவட்டம் ஐந்து தாலுகாவை கொண்டு இருக்கும். பல்லாரி அதன் தலைமை செயலகமாகவும் மற்றும் குருகோடு, கம்பளி, சிறகுப்பா மற்றும் சந்துரு தாலுகாவாக இருக்கும். இதற்கிடையில் UNESCO வின் பாரம்பரிய சின்னமான ஹம்பி நினைவுச் சின்னங்கள் புதிய மாவட்டத்தில் இருக்கும். 

கடந்த ஆண்டு நவம்பர் 18 இல் விஜயநகர மாவட்டத்தை அமைப்பதற்கான உத்தரவை மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செப்டம்பர் 2019 இல் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், பொது மற்றும் நிர்வாகத்தின் கருத்தைக் கணக்கில் கொண்டு, தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் பல்லாரியில் இருந்து புதிய மாவட்டத்தை உருவாக்குவது முக்கியம் என்று எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

Similar News