'அக்னிபாத் நல்ல திட்டம் தானே' - ஒரே போடாக போட்ட மூத்த தலைவர் மணீஷ் திவாரி, கடுப்பில் காங்கிரஸ்

அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவிப்பது காங்கிரஸ் வட்டாரத்திலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-13 09:59 GMT

அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவிப்பது காங்கிரஸ் வட்டாரத்திலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அக்னிபாத் எனப்படும் திட்டத்தை கடந்த மாதம் பா.ஜ.க அரசு கொண்டு வந்தது, இதன் மூலம் ராணுவத்தில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் அவர்கள் நான்கு வருடம் பணிபுரியலாம் அதன் பிறகு அவர்களில் 73 சதவிகிதம் வீரர்கள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அவர்கள் வெளியில் சென்று பிற மாநில அரசு பணிகளிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணியாற்றலாம் என தெரிவித்தது. இதற்கு இடது சாரி அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் முக்கியமாக காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தது.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது, இந்த கூட்டத்தில் பங்கேற்ற 12 எம்பிக்களில் 6 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் இதில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட மணீஷ் திவாரி அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

முன்னதாக அகனிபாத் திட்டத்தை ஆதரித்த அவர் வெளியிட்டிருந்த தனது ட்விட்டர் பதிவில், 'எதார்த்தம் என்னவென்றால் இலகுவான ஆர்வமுள்ள இளைஞர்களின் ஆயுதப்படை இந்தியாவுக்கு தேவை' என குறிப்பிட்டிருந்தார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரே அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவ அளித்து இருப்பது காங்கிரஸ் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


Source - Maalai Malar

Similar News