அக்னிபத் போராட்டத்தில் 1000 கோடி ரூபாய் இழப்பு - ரயில்வே நிர்வாகம் வேதனை

'அக்னிபத் போராட்டத்தில் ரயில்களுக்கு தீ வைத்ததில் ரூ.1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-24 12:17 GMT

'அக்னிபத் போராட்டத்தில் ரயில்களுக்கு தீ வைத்ததில் ரூ.1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் ஏற்பட்டன, இந்த போராட்டங்களுக்கு பலியாகும் விதமாக இளைஞர்கள் ஆங்காங்கே ரயில்களுக்கு தீவைத்தனர்.

இதன் காரணமாக சில ரயில் நிலையங்களில் உள்ள ரயில்கள் பற்றி எரிந்தன. இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறும்பொழுது, அக்னி போராட்டம் காரணமாக சுமார் 60 கோடி பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு சாதாரண ரயில் பெட்டியை தயாரிக்க 80 லட்சம் செலவாகும், பயணிகள் உறங்கும் வசதியுடன் கூடிய ரயில் பெட்டியை தயாரிக்க 1.25 கோடி செலவாகும், ஏசி வசதியுடன் கூடிய ரயில் பெட்டியை தயாரிக்க 3.5 கோடி ரூபாய் செலவாகும்.

மேலும் ஒரு ரயில் இன்ஜினை தயாரிக்க அரசு தரப்பில் இருந்து 20 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுகிறது. 20 பெட்டிகளைக் கொண்ட ரயிலை உருவாக்க 40 கோடிக்கும் அதிகமான தொகையுடன் 23 பெட்டிகளைக் கொண்ட ரயில் இதை உருவாக்க 70 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. ஆனால் இளைஞர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது' என அவர் தெரிவித்தார்.


Source - Junior Vikatan

Similar News