சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலாவை தொடர்ந்து இன்று இளவரசி விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலாவை தொடர்ந்து இன்று இளவரசி விடுதலை

Update: 2021-02-05 08:08 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்த இளவரசி இன்று விடுதலை ஆகிறார். ளவரசி இன்று விடுதலை ஆகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டது. இதனிடையே அவர்கள் மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு முன்னதாக தண்டனை காலம் முடிந்த சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இளவரசி இன்று (05ம் தேதி) விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளவரசி குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவருடைய தண்டனைகாலம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி இன்று காலை 11 மணியளவில் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என தகவல் கூறுகின்றன.

சிறையில் இருந்து விடுதலை ஆன பின்பு, பெங்களூரு அருகே ஹெப்பாளில் தங்கியுள்ள சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் பின்பு இருவரும் வருகின்ற 8ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News