அக்னிபாத் போராட்டத்தில் எரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் எத்தனை தெரியுமா?

Update: 2022-06-19 00:41 GMT

இந்திய ராணுவத்தில் 17.5 வயது முதல் 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு பணியில் சேர்த்துக்கொள்ளும் 'அக்னிபாத்' என்கின்ற புதிய திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தால் சேருகின்ற இளைஞர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை வழங்கி வருகிறது.


இதற்கு பீகார், அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது ராணுவத்தில் சேருவதற்கு பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரயில்களுக்கு தீ வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி இன்று 4வது நாளாக பல்வேறு மாநிலங்களில் வன்முறை நீடித்து வருகிறது. தற்போது வரையில் 12 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதில் 60 ரயில் பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது. இதனால் வடமாநிலங்களில் சுமார் 220 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: ANI

Tags:    

Similar News