அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ராணுவத்தில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியது.
மத்திய அரசு கொண்டு வந்த மிகப்பெரிய திட்டமான அக்னிபாத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான சேர்க்கைக்கான தற்போது இந்த விண்ணப்பத்திற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள், விண்ணப்பிப்பவர்கள் 17.7 வாய்க்குள் இருந்து 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் ஒரு சில பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு ஜூலை மாதம் 30ம் தேதி இறுதி தேதி என்றும் கூறப்பட்டு உள்ளது மேலும் இதுதொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்க, https://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த பக்கத்தில் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அக்னிபாத் திட்டத்திற்கு செய்வதற்கு தகுதி உள்ள அக்னி வீரர்கள் உடற்பயிற்சி தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அக்னிவீர் உடற்தகுதி தேர்விற்கு ஆண்கள் 1600 மீட்டர், பெண்கள் 800 மீட்டர் தாண்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்கள் 12 Feet 6 Inch, பெண்கள் 9 Feet உயரம் தாண்ட என்று கூறப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தில் இந்திய கடற்படையில் பணியாற்ற எப்படி விண்ணப்பிப்பது? உங்கள் விருப்பம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று இருந்தால் இந்த வாழ்வில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியான நிலையில் இன்றோடு கால அவகாசம் நிறைவடைய உள்ளது
Input & Image courtesy: News 18