இந்தியாவில் உள்ள 620 விவசாய அமைப்புகளில் 580 புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்றன!

இந்தியாவில் உள்ள 620 விவசாய அமைப்புகளில் 580 புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்றன!

Update: 2020-12-25 10:04 GMT
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றது. அவர்கள் அரசுடன் பல பேச்சுவார்த்தையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் கூறிவருகின்றனர். ஆனால் இந்த சட்டங்கள் குறித்த பெரும்பாலான விவசாயிகள் இதற்கு ஆதரவாகவே உள்ளனர். மேலும் அவர்களும் நாள்தோறும் தங்கள் ஆதரவை அரசுக்கு வழங்கி வருகின்றனர். 

அதனைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கிசான் சேனாவைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டாமென்று தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனர். மேலும் அவர்கள் இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டால் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

உத்தரப் பிரதேசம் 15 மாவட்டங்களைச் சேர்ந்த கிசான் சேனா விவசாயிகள் டிசம்பர் 25 அன்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து புதிய வேளாண் சட்டங்களுக்குத் தொடர்ந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். எந்த காரணங்களுக்கும் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டாமென்று கிசான் சேனாவின் தலைவர் அமைச்சரிடம் வலியுறுத்தினார். 

விவசாயச் சங்கங்களின் பிரிநிதிகளிடம் உரையாடிய தோமர், விவசாய நலனுக்காக எந்த விதமான செயல்களும் எதிர்க்கட்சிகள் தங்கள் ஆட்சியின் போது செய்யவில்லை, ஆனால் தற்போது செய்யும் சீர் திருத்தங்கள் குறித்து மட்டும் கேள்விகள் எழுப்புகின்றனர் என்று கூறினார். 

பாகுபத் MP, முன்னாள் வேளாண்துறை அமைச்சர் சத்தியபால் சிங், கிசான் மஜ்தூர் சங்கத் தலைவர் சவுத்ரி பிரகாஷ் தோமர், துணைத் தலைவர் தாகூர் ராஜேந்திர சிங், பொதுச் செயலாளர் பாபுராம் தியாகி, கிசான் சேனாவின் தேசிய கான்வீனர் கௌரி சங்கர் சிங் மற்றும் பிற அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து நான்கு வாரங்களாக மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். மறுபுறம், விவசாய மசோதாக்களுக்கு ஆதரவளித்து நாள் தோறும் மத்திய வேளாண்துறை அமைச்சரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். 

Similar News