விவசாயத்தை நாட்டின் முக்கிய சொத்தாக உருவாக்குவது நோக்கம்: நிதி ரூ.30,000 கோடி இலக்கு!

வேளாண் உள்கட்டமைப்பு நிதி ரூ.30,000 கோடி இலக்கை எட்டியுள்ளது.

Update: 2023-01-24 14:01 GMT

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண் உள்கட்டமைப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.15,000 கோடியுடன், திரட்டப்பட்ட நிதியுடன் சேர்த்து ரூ.30,000 கோடி இலக்கை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர், விவசாயி உற்பத்தி நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், இணை ஒருங்கிணைப்புக்குழு போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு ஒட்டுமொத்த நிதி ஆதாரம் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக அறுவடைக்குப் பிந்தைய காலகட்ட உள்கட்டமைப்பு வேளாண்மை மற்றும் நாடு முழுவதிலும் வேளாண் நடவடிக்கைகளுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவது போன்ற முக்கிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன.


இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.2 கோடி அளவில் கடன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பும் உண்டு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜூலை 8-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.


அறுவடைக்கு பிந்தைய காலகட்டத்தில் உள்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் விவசாய நடவடிக்கைகளை நாட்டின் முக்கிய சொத்தாக உருவாக்குவது இதன் நோக்கமாகும். வரும் 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் வரும் 2032-33 வரையில் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News