வேளாண் சட்டம்: தற்காலிக சொகுசு வீடுகள் கட்டிப் போராடும் 'போராளிகள்'!

வேளாண் சட்டம்: தற்காலிக சொகுசு வீடுகள் கட்டிப் போராடும் 'போராளிகள்'!

Update: 2021-01-07 07:45 GMT

கடந்த ஒரு மாதமாகப் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த போராட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் அங்குத் தற்காலிக டென்டுகள் அமைத்துத் தங்கி போராட்டம் நடத்துகின்றன. தற்போது அங்குப் போராட்டம் நடத்துபவர்கள் ஒரு மகிழ்ச்சியில் ஈடுபடும் விதமாகச் செயல்பட்டு வருகின்றனர். 

தற்போது அந்த கூடாரங்களுக்கு அருகே ஸ்டால்கள், கடைகள் போன்ற வணிக முயற்சிகள் செய்துவருவதாகத் தென்படுகின்றது. அங்கு நூற்றுக்கணக்கான கூடாரங்களை, சிறிய வீடுகள் மற்றும் சமையலறைகள் அதனை வானிலை காரணமாகப் பாதுகாக்கச் சுவர்கள் போன்றவற்றையும் அமைத்துள்ளனர். 

வரும் நாட்களில் அதுபோன்று மேலும் சிலவற்றை அமைக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு சிமெண்ட் மற்றும் செங்களால் அமைக்கப்பட்ட சுவர்களில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மகிழ்ச்சியாகப் புகைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். 

விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் பல்வேறு இடங்களின் நடைபெறும் இதுபோன்று நிகழ்வுகள் கொண்ட வீடீயோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுவர்கள் மற்றும் சமையலறைக்கு நிரந்தரமாக இருப்பது போன்று தெரிகிறது. 

ஆர்ப்பாட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு இலவச கூடாரங்கள் மற்றும் மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. இவ்வாறு இலவசமாக நடத்தும் மருத்துவ முகாம்கள் அனைத்தும் போராட்டம் நடத்துகின்ற விவசாயிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கே. அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்கு இலவச நீர் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைப் பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் பண மோசடி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அந்த கூடாரங்களுக்கு அருகே இசை நிகழ்ச்சிகள், LED திரைகள் கொண்ட மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. மேலும் அங்கு சில கூடாரங்களைச் சட்டவிரோதமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் சட்டவிரோதமாக காபி கடைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சமையலறைகளையும் அமைத்துள்ளது. மேலும் சில இடங்களில் சட்டவிரோதமாகக் காங்கிரஸ் சமையலறைகளை அமைத்துள்ளது. சிங்கு எல்லைகளில் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கூடாரங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது தவிர நெடுஞ்சாலைகளில் உடற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் கொரோனா தொற்றுநோய் காலங்களில் ஊரடங்கு காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை டெல்லி மற்றும் பீகாரில் இருந்து அனுப்பப்பட்டனர். தற்போது இவ்வாறு நிலங்களை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு இலவசமாக வைஃபை வசதி செய்யப்பட்டு வருகின்றது. நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. இதுவே சிங்கு எல்லையில் என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றது. 

இப்போது நடந்துவரும் போராட்டங்கள் காரணமாக டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் 27,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விவசாயிகள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப விரும்புவார்களுக்கு தங்கள் விளைபொருட்களை விற்கலாம் என்று அனுமதி அளித்து இந்த மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டுள்ளது, இதை எதிர்த்து ஹரியானா மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றன.  பழைய சட்டத்தின் படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மண்டிகள் மூலம் APMC மூலமே விற்பனை செய்ய முடியும். இருப்பினும், டெல்லி எல்லையில் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. 

Similar News