கொரனா தடுப்பூசி விவகாரம் - U டர்ன் போட்ட அகிலேஷ் யாதவ்!

கொரனா தடுப்பூசி விவகாரம் - U டர்ன் போட்ட அகிலேஷ் யாதவ்!

Update: 2021-01-03 18:21 GMT
கடந்த ஆண்டு உலக நாடுகள் அனைத்தையும் திருப்பி போட்ட கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதனைச் சோதனை செய்து மக்களுக்கு அளிக்கும் முயற்சி ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராகத் தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதனை மூன்று கட்ட சோதனையிலும் வெற்றிபெற்று முதற்கட்டமாக நான்கு மாநிலங்களில் மக்களிடையே சோதனை செய்து வருகின்றது. இந்நிலையில் இதனையும் அரசியல் நோக்கமாகக் கருதி பலர் முரண்பாடு கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர் சில எதிர் காட்சிகள். 

சனிக்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி பா.ஜ.கவுடையது என்று கூறி அதனைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்று சர்ச்சைக்குரிய பேச்சை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கொடுத்த நிலையில் ஒரு நாட்களுக்குப் பிறகு இன்று அவரது கருத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட ட்விட்டில், "தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியம் வாய்ந்த செயல். அதனை பா.ஜ.க ஒரு நிகழ்ச்சியாகக் கருதாமல் இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை இதற்குப் பணயம் வைக்க முடியாது. அதனால் மக்களுக்கு அதனை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் ஏழை மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நாளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார். 

முதனாள் அவர் கூரிய கருது குறித்து அவர் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை. சனிக்கிழமை அவர் வெளியிட்ட சர்ச்சைக்கு குறிய பேச்சு, அடுத்த தேர்தலில் எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது நான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் மற்றும் அதனை மக்களுக்கு இலவசமாக வழங்குவேன்  என்று மக்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

"நான் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன். நான் பா.ஜ.கவின் தடுப்பூசியை எவ்வாறு நம்ப முடியும், எங்கள் அரசாங்கம் வருகையில் அனைவருக்கு இலவச தடுப்பூசி வழங்குவோம். இருப்பினும் அவர் சனிக்கிழமை அன்று மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் குறிப்பிட்ட தேதியை வழங்குமாறு பா.ஜ.க விற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்."

எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி தடுப்பூசி குறித்த சர்ச்சைக்குரிய பேச்சைத் தவிர்க்க வேண்டிய இந்த நேரத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தடுப்பூசியை இவ்வாறு இழிவு படுத்திக் கூறி கீழ் மட்ட அரசியலில் ஈடுபடுவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

மேலும் தற்போது பாரத் பையோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடூட் கண்டுபிடித்த கொரோனா வைரஸ்கு எதிரான தடுப்பூசிக்கு ஞாயிற்றுக்கிழமை DCGI ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் தன் ட்விட்டில் வெளிப்படுத்தினார். 

Similar News