மனித வெடிகுண்டுகளாக மாறி இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் - இந்தியாவிற்கு அல்கொய்தா மிரட்டல்

நபிகள் குறித்த பேச்சு தொடர்பாக இந்தியாவிற்கு அல்கொய்தா தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் கடிதம் விடுத்துள்ளது.

Update: 2022-06-08 08:15 GMT

நபிகள் குறித்த பேச்சு தொடர்பாக இந்தியாவிற்கு அல்கொய்தா தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் கடிதம் விடுத்துள்ளது.

முகமது நபி குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்பொழுது அல்-குவைதா விடம் இருந்து இந்தியாவிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.


இந்த மிரட்டல் கடிதத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் குறிப்பிட்டுள்ளதாவது, 'முகமது நபியின் கௌரவத்திற்காக நடக்கும் போரில் மும்பை, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்.

முகமது நபியை அவமதித்தவர்களை கொலை செய்வோம், முகமது நபியை அவமதிக்கும் அவர்களின் பட்டாளத்தை அழிப்போம், எங்கள் உடலிலும், எங்கள் குழந்தைகளின் உடலில் வெடிகுண்டுகளை கட்டுவோம். காவி பயங்கரவாதிகள் இப்போது டெல்லி, மும்பை, உ.பி மற்றும் குஜராத்தில் தங்கள் முடிவுக்கு காத்திருக்க வேண்டும். நாங்கள் முகமது நபியின் கௌரவத்திற்காக போராடுகிறோம்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு பிறகு முகமது நபி குறித்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து குறிப்பிட்ட நகரங்களில் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.


Source - Junior Vikatan

Similar News