அனைத்து உதவிகளும் செய்யப்படும்.. முதலமைச்சருக்கு பிரதமர் மோடி உறுதி.!

அனைத்து உதவிகளும் செய்யப்படும்.. முதலமைச்சருக்கு பிரதமர் மோடி உறுதி.!

Update: 2020-12-02 20:03 GMT

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது பாம்பனுக்கு 420 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், திரிகோணமலைக்கு 200 கிமீ, கன்னியாகுமரிக்கு 600 கிலோ மீட்டர் தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல், கரையை கடக்கும்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘புரெவி’ சூறாவளி காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் நிலைமைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்தேன். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News