அனைவருக்கும் 2021 இறுதிக்குள் தடுப்பூசி: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3வது கட்டமாக 18முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் மும்முரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், வருகின்ற டிசம்பர் 2021 மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனிடையே, நாட்டின் கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ''இந்தியாவில் இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பர் இறுதிக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் எனக்கூறினார்.