'அல்லா ஹு அக்பர்' கோஷமே இந்து மாணவர்களை கொதிப்படைய செய்தது: கல்வித்துறை அமைச்சர் தகவல்!
கர்நாடகாவில் கல்லூரி மாணவி ஒருவர் அல்லா ஹு அக்பர் என்ற கோஷத்தை எழுப்பினார். இதன் காரணமாகவே மாணவர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். ஹிஜாப் சம்பவத்தால் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் ஒருவிதமான அதிர்வை ஏற்படுத்தியது. ஒரு தரப்பு ஆதரவாகவும் மற்றொரு தரப்பு எதிராகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதில் பல கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வருவதை பார்க்க முடிந்தது. இதனால் கர்நாடகா மாநிலம் முழுவதும் ஒரு
இந்த சூழ்நிலையில் நேற்று (ஜனவரி 8) கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் பர்தா அணிந்து வந்த மாணவி அமைதியாக செல்லாமல் தேவையில்லாமல் 'அல்லா ஹு அக்பர்' என்று கோஷமிட்டார். அமைதியாக இருந்த மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை எழுப்ப நேரிட்டது. இருந்த போதிலும் மாணவிக்கு எவ்வித தொல்லையும் அளிக்காமல் மாணவர்கள் அமைதி காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கர்நாடகா கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷிடம் ஜெய் ஸ்ரீராம் கோஷம் பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பர்தா அணிந்து வந்த மாணவியை சுற்றி வளைக்கவில்லை. மாற்றாக அந்த மாணவி தேவையின்றி 'அல்லா ஹு அக்பர்' என்ற கோஷத்தை எழுப்பினார். அதன் பின்னரே மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை எழுப்பி மாணவியை சூழ்ந்தனர். தேவையின்றி மாணவி அல்லா ஹு அக்பர் கோஷத்தை போட்டதால்தான் மாணவர்கள் கொதித்து எழுந்தனர். படிக்கின்றவர்கள் எதற்காக அல்லா ஹு அக்பர் என்றும், ஜெய் ஸ்ரீராம் எனவும் கோஷங்களை எழுப்ப வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai