ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து, அதனை இலவசமாக வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

Update: 2021-04-22 11:10 GMT

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து, அதனை இலவசமாக வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தில் தினமும் 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.




 


இந்நிலையில், இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ''நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்ககை உயர்ந்து வருகிறது.

இதனால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என கூறியிருந்தார்.


 



இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை நாங்களே முன்வந்து விசாரிப்போம் என்று கூறினர். மேலும், இந்த வழக்கை நாளைக்கு (ஏப்ரல் 23) ஒத்திவைத்தனர்.

Similar News