கார்களில் இது கட்டாயம் இருக்கனும்.. மத்திய அரசு சுற்றறிக்கை.!

கார்களில் இது கட்டாயம் இருக்கனும்.. மத்திய அரசு சுற்றறிக்கை.!

Update: 2020-12-29 20:31 GMT

2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில், இரண்டு ஏர் பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நமது நாட்டில் பல்வேறு வகையான விபத்துக்கள் நிகழ்கிறது. அதில் காரில் சென்று இறப்பவர்கள் அதிகம். மிகவும் அதிவேகமாக கார் ஓட்டுதலே இதற்கு காரணம். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை விதித்து வருகிறது. 

இந்நிலையில், கார் தொடர்பான அறிக்கையில், கார்களில் ஓட்டுநர் இருக்கை மட்டுமின்றி முன் பக்கமுள்ள மற்றொரு இருக்கையிலும் ஏர் பேக் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய தரச்சான்று தரத்தில் ஏர் பேக் அமைப்பது கட்டாயம் அனைத்து கார்களிலும் ஓட்டுநருக்கு அருகில் இருக்கும் சீட்டுக்கும் ஏர் பேக் அமைப்பது கட்டாயம்.

ஏற்கனவே உள்ள பழைய மாடல்களில் புதிய கார்கள் உருவாக்கப்பட்டால், ஜூன் முதல் இரு பக்க சீட்டிலும் ஏர்பேக் அமைக்க வேண்டும். அதற்கான வடிவமைப்பில் கட்டாயம் மாற்றம் செய்ய வேண்டும். இது பற்றி பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News