பிரதமரின் வரலாற்று சாதனை: தேசிய போர் நினைவுச் சுடருடன் இணைந்த அமர் ஜவான் ஜோதி!

Update: 2022-01-21 11:29 GMT

டெல்லியில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவுச்சுடருடன் இணைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து ராணுவ வீரர்களின் சேவைகள் மற்றும் தியாகங்களுக்கு தனி மதிப்பு அளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதலாம் உலகப்போரின் போது உயிர் தியாகம் செய்த 84,000 ராணுவ வீரர்களின் நினைவாக டெல்லியில் இந்தியா கேட் திறக்கப்பட்டது. மேலும், கடந்த 1971ம் ஆண்டு, இந்தியா, பாகிஸ்தான் போக்கு பின்னர் தனிநாடாக உருவான வங்கதேசத்திற்காக நமது இந்திய ராணுவத்தினர் 3,843 பேர் உயிர் தியாகம் செய்தனர். அவர்களின் நினைவாக 1972 ஜனவரி 26ம் தேதி அமர் ஜவான் ஜோதி நிறுவப்பட்டது. பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்கள் ஆண்டு தோறும் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இதனிடையே உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக பிரதமர் மோடி அரசு தேசிய போர் நினைவுச்சின்னத்தை கட்டியது. அவை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இதனிடையே குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாவின் போது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளும் அமர் ஜவான் ஜோதியில் இருந்து புதிய சுடர் தளத்திற்கு மாற்றப்பட்டது. அதாவது சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் புதிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 25,942 ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க ஜவான் ஜோதி தற்போது போர் நினைவுச் சுடருடன் இணைக்கப்பட்டது. இதில் இந்திய ராணுவத்தின் முப்படை அதிகாரிகளும் பங்கேற்று உரிய மரியாதை செலுத்தினர். இதில் ராணுவ வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். குடியரசுத் தினவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போர் நினைவுச் சின்னத்துடன் ஜவான் ஜோதி இணைந்துள்ளது அனைத்து ராணுவ வீரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News