COVID-19 தடுப்பூசி திட்டம் முடிந்ததும் CAA சட்டம் செயல்படுத்தப்படும் - அமித் ஷா திட்டவட்டம்!

COVID-19 தடுப்பூசி திட்டம் முடிந்ததும் CAA சட்டம் செயல்படுத்தப்படும் - அமித் ஷா திட்டவட்டம்!

Update: 2021-02-12 07:45 GMT

COVID-19 தடுப்பூசி திட்டம் முடிந்ததும் CAA சட்டம் செயல்படுத்தப்படும், மம்தா பானர்ஜி அதை எதிர்க்க முடியாது, அவர் ஆட்சியில் இருக்க மாட்டார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து கேள்வி கேட்டா அமித் ஷா, பாஜக எப்போதும் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது என்றார்.

"நாங்கள் ஒரு தவறான வாக்குறுதியை அளித்ததாக மம்தா கூறினார். அவர் CAAவை எதிர்க்கத் தொடங்கினார். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். பாஜக எப்போதும் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. நாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும் என்றார்.

COVID-19 தடுப்பூசி முடிந்த பிறகு CAA

இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, CAA அமல்படுத்துவதை எதிர்க்கும் நிலையில் பானர்ஜி இருக்க மாட்டார் என்றும் அமித் ஷா கூறினார்.

2020 ஆம் ஆண்டில் COVID-19 தொற்றுநோயால் நாடு பாதிக்கப்பட்டது. அதனால் CAA செயல்பாட்டைக் கைவிட வேண்டியிருந்தது. தற்போது நாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும், என்றார்.

CAA திட்டத்தின் கீழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்குவதற்கான செயல்முறை, மேற்கு வங்கத்தின் மாதுவா சமூகம் உட்பட, COVID தடுப்பூசி செயல்முறை முடிந்ததும் தொடங்கும்" என்று ஷா கூறினார்.

CAA இந்திய சிறுபான்மையினரின் குடியுரிமை நிலையை பாதிக்காது

CAA பற்றி சிறுபான்மையினரை தவறாக வழிநடத்தியதற்காக எதிர்க்கட்சிகளை கண்டித்த அமித ஷா, அதன் நடைமுறை இந்திய சிறுபான்மையினரின் குடியுரிமை நிலையை பாதிக்காது என்றார்.

2018 ஆம் ஆண்டில், புதிய குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதாக மோடி அரசு உறுதியளித்ததோடு, 2019 ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அதனை செயல்படுத்தியதாக கூறினார்.

Similar News