நாட்டின் கனவை நினைவாக கடுமையாக பாடுபட்ட கர்மயோகி பட்டேல் - அமித்ஷா பெருமிதம்!

இந்தியாவின் கனவை நினைவாக்க கடுமையாக பாடுபட்ட கர்மயோகி சர்தார் வல்லபாய் பட்டேல் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.

Update: 2022-11-01 09:25 GMT

நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலில் பிறந்த நாள் நேற்று டெல்லிகள் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், யார் தனது மரணத்திற்கு பிறகும், நீண்ட காலத்திற்கு பிறகும் நினைவு கூறப்படுகிறார்களோ? அவர்தான் மாபெரும் தலைவர். அந்த சிறப்பு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உள்ளது. அவர் கனவு கண்டவர் மட்டும் அல்லாது., அதனை நினைவாக்க கடுமையாக பாடுபட்டவர்.


நாட்டின் நலனுக்காக பாடுபட்ட கர்மயோகி. அவர் காங்கிரஸ் கமிட்டி பட்டேலுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. இருப்பினும் அவர் பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தார். அவர் நாட்டின் முதலாவது பிரதமர் ஆக்கி இருந்தால் நாடு இன்று சந்திக்கும் நிறைய பிரச்சனைகள் வந்திருக்காது என்று பொது கருத்து நிலவைக் கொண்டிருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேலின் 500 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார். லட்சத்தீவு, ஜோத்பூர், ஹைதராபாத், காஷ்மீர் ஆகியவற்றை இணைத்தார்.


அவர் இல்லாவிட்டால் இந்திய வரைபடம் எப்போது இருப்பது போல் இருந்திருக்காது. அவர் இல்லாவிட்டால் ஒன்றுபட்ட இந்தியா என்ற எண்ணம் சாத்தியமாகி இருக்காது. மத்திய பணிகள், மத்திய உளவு பணிகள் உள்ளிட்ட அமைப்புகளும் அடித்தளம் அமைத்தவர் அவர்தான். அவரைப் பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும். மோடி அரசு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. இன்று நாட்டின் எல்லையை கெட்ட எண்ணத்துடன் அணுக யாரும் யாருக்கும் தைரியம் கிடையாது. அது போல் நாட்டின் பொருளாதாரத்தில் மோடி அரசு வலுப்படுத்தி இருக்கிறது என்று கூறுகிறார்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News