மக்களை பாதுகாக்க தான் பாப்புலர் பிரண்ட் அமைப்பிற்கு தடை: அமித்ஷா அதிரடி!
கேரள மக்களை பாதுகாப்பதற்காக தான் பாப்புலர் பிரண்ட் அமைப்பிற்கு மத்திய அரசு தடை வழங்கியது..
மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்கள் தற்பொழுது கேரளாவில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். குறிப்பாக கேரள மாநிலம் திருச்சூரில் பாரத ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில், கேரள மக்களின் நலனுக்காக தான் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளுக்கு தடை விதித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
குறிப்பாக கேரள மக்கள் வன்முறை விரும்பாதவர்கள் என்றும் அவர் கூறினார். கம்யூனிஸ்டுகளின் வன்முறை அரசியலையும் அவர்கள் தற்போது வரை ஒழிக்க வில்லை,இது எனக்கு நன்றாக தெரியும் என்று அவர் குறிப்பிட்டார். கேரள மக்களின் நலன்களை பாதுகாக்க தான் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாப்புலர் பிராண்ட் பிரண்ட் அமைப்பிற்கு தடைவிதித்து இருக்கிறது என்று அவர் கூறினார். இது தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இத்தகைய முடிவுகள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால் இதனை அவர்கள் விரும்பவில்லை என்று வெளிப்படையாக அவர் பேசி இருக்கிறார். இந்த ஒரு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியும் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், திருச்சூர் பாராளுமன்ற தொகுதிகளில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். இல்லையெனில் கம்யூனிஸ்டுகள் பலம் சக்தி வாய்ந்ததாக கருதும் கண்ணூர் தொகுதிகளிலும் போட்டியிட நான் தயார் என்று கூறினார்.
Input & Image courtesy: Malaimalar