ஆந்திரா: கோவில்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிராக யாத்திரை நடத்தவுள்ள திரிதண்டி சின்னா ஜெயார் சுவாமி!

ஆந்திரா: கோவில்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிராக யாத்திரை நடத்தவுள்ள திரிதண்டி சின்னா ஜெயார் சுவாமி!

Update: 2021-01-06 16:16 GMT
தற்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக இந்து கோவில்களில் உள்ள சிலைகள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடந்து கொண்டே இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்து மத தலைவர் திரிதண்டி சின்னா ஜெயார் சுவாமி ஜனவரி 17 முதல் சமீபத்தில் தாக்கப்பட்ட இந்து கோவில்களுக்கு யாத்திரை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இந்த பயணமானது இந்து கோவில்களுக்குப் பாதுகாப்பு கோரி தொடங்குவதாக திரிதண்டி சின்னா ஜெயார் சுவாமி பத்திரிகையாளருக்குத் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய இவர், தொடர்ச்சியாகக் கோவில்களுக்கு மேல் நடக்கும் தாக்குதலுக்கு அதிருப்தி தெரிவித்து சமீப காலமாக 50 இந்து கோவில்களுக்கு மேல் தாக்குதல் நடந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 

சிங்காரயகொண்டையில் உள்ள ஒரு கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி சிலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், அதிகாரிகளிடம் இதுபோன்று மேலும் தாக்குதல் நடக்காமல் பாதுகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் கோவில்களில் மேல் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உளவுத்துறை அதிகார குழுவிடம் நேரடி விசாரணை நடத்தக் கோரியுள்ளதாகவும் கூறியுள்ளார்.  

உத்தரவுகள் விடுக்கப்படும் கோவில்களில் CCTV கமெராக்கள் நிறுவாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த தாக்குதல்கள் கோவில்களின் பாதுகாப்பின்மை தன்மையை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் வலுவான பாதுகாப்பை வழங்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் பத்திரிகையாளர்கள் பேட்டியில் எதிர்கால கோவில்களில் மீதுள்ள செயல் திட்டங்கள் குறித்து இந்து தலைவர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது போன்ற தாக்குதலுக்குத் தனது அமைதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். இதே போன்று மசூதிகள் அல்லது தேவாலயத்தில் தாக்குதல் ஏற்பட்டால் உலகமுழுவதும் கண்டனங்களும் மற்றும் எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கும் ஆனால் கோவிலில் நடைபெறும் தாக்குதலுக்கு அமைதியே வெளிப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார். 

Similar News