உரத்தில் தன்னிறைவை நோக்கிய மற்றொரு பெரிய சாதனை: பிரதமர் பாராட்டு!
நானோ யூரியாவைத் தொடர்ந்து நானோ டி.ஏ.பி-க்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.
நானோ யூரியாவைத் தொடர்ந்து நானோ டி.ஏ.பி-க்கு அங்கீகாரம். விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான முக்கியமானப் படி எனப் பிரதமர் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். நானோ யூரியாவுக்குப் பிறகு, மத்திய அரசு இப்போது நானோ டி.ஏ.பி-க்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு நமது விவசாய சகோதர- சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படி எனப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, "நமது விவசாய சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படி” எனப் பதிவிட்டுள்ளார். குறிப்பாக விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு முடிவுகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் உரத்தின் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி இந்தியாவின் ஒரு சாதனையில் இது ஒரு மையில் கல்லாக பார்க்கப்படுகிறது. வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இன்றைய விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் நானோ டி.ஏ.பி-க்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News