#JusticeForRinkuSharma தலைநகரில் மற்றுமொரு படுகொலை! ஜிஹாதிகள் அட்டூழியம் தொடர் கதையாகிறதா?

#JusticeForRinkuSharma தலைநகரில் மற்றுமொரு படுகொலை! ஜிஹாதிகள் அட்டூழியம் தொடர் கதையாகிறதா?

Update: 2021-02-12 17:34 GMT
ரிங்கு சர்மா என்ற 25 வயது மதிக்கத்தக்க  இளைஞனை 25 முதல் 30 பேர் சென்ற கும்பல் கொடூரமாக புதன்கிழமையன்று தாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சேர்த்துள்ளனர். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். எனவே  இத்தகைய செயல்களை புரிந்தது ஜிஹாதிகளின் வேலையாக இருக்கும் என்றும்  நம்பப்படுகிறது.  ஏனென்றால் தற்போது இறந்து உள்ள ரிங்கு ஷர்மாவின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து இருப்பதாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

மேலும்  ரிங்கு ஷர்மா அன்று இரவு தாக்கப்பட்ட அன்று குடும்பத்தினரின் அனைவரையும் அந்த கும்பல் மிரட்டியதாகவும், யாரையுமே மருத்துவமனைக்குப் போக விடாமல் தடுத்து தாகவும் குடும்ப உறுப்பினர்கள் தற்போது விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த கும்பல் கைகளில் கத்தியையும் பல ஆயுத பொருட்களையும் வைத்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நிதியை திரட்டுவதற்காக அந்த குடும்பத்தினர் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக, இந்த கும்பல் அவர்களை தாக்கியதாகவும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிங்கு சர்மாவின் நிதி திரட்டுவதற்கான பணியை மேற் கொண்டதாகவும் மேலும் அந்தப் பணியின் போது பல்வேறு இந்துக்களை ஒன்று திரட்டிய காரணத்திற்காகவும் குடும்பத்தினரையும் மற்றும் ரிங்கு சர்மாவையும் அந்தக் கும்பல் பலமாக தாக்கியதாக அவருடைய சகோதரர் கூறுகிறார்.  இந்த வழக்கில் போலீசார் முகமது இஸ்லாம், டேனிஷ், ஜாஹித் மற்றும் மெஹ்தாப் என அடையாளம் காணப்பட்ட நான்கு பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொலை ஜிஹாதிகளின் கும்பலை சேர்ந்தவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று ஊர்ஜிதமாகிறது. ஏனென்றால் இவர்களுடைய பாணியில் கொலை என்றால் பாதிக்கப்பட்டவரை சுற்றிவளைத்து அவரை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்வது ஆகும். கத்தி குத்துதல் என்பது தீவிர ஜிஹாதிகளின் தாக்குதலுக்கான பொதுவான முறையாகும். இந்த நிகழ்ச்சியை போன்றே டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட புலனாய்வுப் பணியாளர் அங்கித் சர்மாவும் இதேபோல் 51 முறை ஒரு கும்பலால் குத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News