பஞ்சாப் பேரணிக்குப் பிறகு குற்றவாளியான லகா சிதானா வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ!
பஞ்சாப் பேரணிக்குப் பிறகு குற்றவாளியான லகா சிதானா வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ!
பிப்ரவரி 23 இல் பஞ்சாபில் பதிந்தா மெஹ்ராஜ் கிராமத்தில் எந்தவித அச்சமும் இன்றி நேரடியாகக் கலந்து கொண்ட குடியரசு தின குற்றவாளியான லகா சிதானா செவ்வாய்க்கிழமை இரவு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேரணியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். "இன்று பஞ்சாப் இளைஞர்கள் பேஸ்புக்கில் மட்டும் பேசமாட்டார்கள் மற்றும் தங்கள் உரிமைகளுக்காக நேரடியாகச் சண்டை இடுவர் என்பதை நிரூபித்துவிட்டனர். அந்த போரில் வெற்றிபெறும் வரை அவர்கள் நிறுத்தப்போவதில்லை," என்று குற்றவாளி லகா சிதானா தெரிவித்திருந்தான்.
டெல்லி காவல்துறையிடம் இருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கும் இந்த குற்றவாளி, விவசாயிகளை டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தை நடத்துமாறும் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் கலந்துகொள்ளக் கேட்டுள்ளான். தொடர்ந்து விவசாய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் உடனே டெல்லிக்கு இளைஞர்களை வலியுறுத்தினார்.
மேலும் அவர் பஞ்சாபில் நடந்த பேரணியில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசி, இந்த பேரணிக்கு AAP ஆதரவளித்ததாகத் தெரிவித்தார். குடியரசு தின வன்முறையில் தேடப்படும் குற்றவாளியான லகா சிதானா மெஹ்ராஜில் நடந்த பேரணியில் உரையாற்றி பின்பு அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றார்.
லகா சிதானா ஒரு தேடப்படும் குற்றவாளியாவார் மற்றும் இவர் மேல் பஞ்சாபில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர் பலமுறை சிறைக்கும் சென்றுள்ளார்.