இந்தியாவுக்குள் எந்த இன்டர்நெட் நிறுவனங்களும் வரலாம் - ஆனால் நாட்டுக்கெதிரான துஷ்பிரயோகத்திற்கு அனுமதியில்லை!

இந்தியாவுக்குள் எந்த இன்டர்நெட் நிறுவனங்களும் வரலாம் - ஆனால் நாட்டுக்கெதிரான துஷ்பிரயோகத்திற்கு அனுமதியில்லை!

Update: 2021-02-26 18:37 GMT

சமூக இணைய தளம் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளம் தொடர்பாக இணக்கமான மேற்பார்வையிடும் பொறிமுறையை பெறுவதற்காக,  மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-ஐ உறுதி செய்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் படி,  இந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடக தளங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள், இந்திய அரசியலமைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேள்விகள் எழுப்பவும், விமர்சிக்கவும், சமூக ஊடக தளங்களை பயன்படுத்தலாம்.

சமூக ஊடக தளங்கள் சாதாரண பயனர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன, ஆனால் அதன் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஓடிடி பற்றிய விதிகள் சுய கட்டுப்பாட்டு முறையில் கவனம் செலுத்துகின்றன. இதன் மூலம் வலுவான குறைதீர்ப்பு வழிமுறை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பத்திரிக்கை மற்றும் படைப்பாற்றல் சுதந்திரம் நிலைநிறுத்தப்படுகிறது. தற்போது முன்மொழியப்பட்ட விதிமுறைகள் முற்போக்கானது, தாராளமயமானது மற்றும் சம காலத்தைச் சேர்ந்தது.

படைப்பாற்றல் மற்றும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது குறித்த எந்தவொரு தவறான புரிதலையும் நீக்கி, மக்களின் மாறுபட்ட கவலைகளை இது தீர்க்க முற்படுகிறது. தியேட்டர், டி.வி, இன்டர்நெட் மூலம் பார்க்கும் பார்வையாளர்களின் வித்தியாசத்தை மனிதில் கொண்டு இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு இந்தியரின் உரிமையையும் மத்திய அரசு மதிக்கிறது.  இந்தியா உலகின் மிகப் பெரிய திறந்தவெளி இன்டர்நெட் சமூகமாக உள்ளது.  அதனால் சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க வரவேற்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Similar News