இந்தியாவுக்கு எதிரான பொய்யான கருத்துக்கள்: யூ டியூப், இணையதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

Update: 2022-01-20 03:05 GMT

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் யூ டியூப் மற்றும் இணையதளங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட 20 இணையதளங்களின் கணக்குகள் கண்டுப்பிடிக்கப்பட்டு அதனை முடக்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

மேலும், இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களை பரப்பும், நல்லிணக்கத்தைக் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் இணைய தளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு முடக்கப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source: Maalaimalar

Image Courtesy:India Radio

Tags:    

Similar News