இந்தியாவின் ஆயுதங்கள் ஏற்றுமதி 2014க்கு பின்னர் 6 மடங்கு உயர்வு: மத்திய அரசு தகவல்!

Update: 2022-03-26 10:38 GMT

இந்தியாவின் ஆயுதங்கள் ஏற்றுமதி கடந்த 7 ஆண்டுகளுக்கு பின்னர் 6 மடங்காக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தகவலை கூறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் நடப்பு நிதியாண்டின் இதுவரை 11,607 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மக்களவையில் தெரிவித்தார். இதற்கு நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தமே காரணம் என்றார். அதே சமயம் வருகின்ற 2025ம் ஆண்டுக்குள் 36,500 கோடி ரூபாய் அளவிலான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News