அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீர் விரையும் ராணுவ தளபதி நரவானே!

காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் திட்டமிட்டு கொன்று வருகின்றனர். நேற்று முன்தினம் கூட வெளிமாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு வேலை பார்க்கும் வெளிமாநில மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2021-10-19 10:44 GMT

காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் திட்டமிட்டு கொன்று வருகின்றனர். நேற்று முன்தினம் கூட வெளிமாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு வேலை பார்க்கும் வெளிமாநில மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே காஷ்மீரில் ராணுவ பாதுகாப்பு பற்றியும், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அங்கு ராணுவங்கள் உஷார் படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆய்வு செய்வதற்காக தலைமை ராணுவ தளபதி நரவானே இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார். இத்தகவலை ராணுவம் ட்விட்டர் தெரிவித்துள்ளது. தற்போது ராணுவ தளபதி காஷ்மீர் விரைவது அங்குள்ள பயங்கரவாதிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: Indian Army Twiter

https://www.dailythanthi.com/News/TopNews/2021/10/19082248/Army-chief-Narawane-is-leaving-for-Kashmir-on-a-twoday.vpf

Tags:    

Similar News