215 ஆயுர்வேத மூலிகைகளை பாதுகாக்கும் நோக்கம்: ஆரோக்கிய வனத்தின் முக்கியத்துவம் என்ன?

ஆரோக்கிய வனம், ஆயுர்வேதத்தில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகள் மற்றும் தாவரங்களை கொண்டுள்ளது.

Update: 2022-03-03 01:17 GMT

தற்பொழுது குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் மார்ச் 1ஆம் தேதி அன்று வைத்தார். மேலும் இந்த ஆரோக்கிய வனத்தில் பெருமைகள் என்ன? இதன் முக்கியத்துவம் ஏன்? உணரப்படுகிறது என்பது தொடர்பான விஷயங்களைத்தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். ஆரோக்கிய வனம் என்பது முழுக்க முழுக்க சுமைகளால் நிறைந்த ஒரு வாரம் ஆகும். மூலிகைச் செடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது கட்டமைக்கப்பட்டுள்ளதாம். 


நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் இருந்தே மூலிகைச் செடிகள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு நாம் நம்முடைய வாழ்க்கையில் உடம்பு சரியில்லை என்று சொல்லாததற்கு காரணம். நாம் அன்றாடம் வளர்க்கும் மூலிகை செடிகள் தான். சளி பிடித்தால் கூட துளசி, தூதுவளை, ஓமம் செடி போன்ற பல்வேறு வகையான மூலிகைகள் நமக்கு பயன்பட்டன. ஆனால் மாறிவரும் நவீன உலகத்தில் இத்தகைய மூலிகைச் செடிகளை பாதுகாக்க நாம் தவறிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டுமாம். மிகவும் அரிதான வகையில் தான் பலருடைய வீடுகளிலும் இத்தகைய செடிகள் வளர்க்கப்படுகிறது. எனவே அவற்றை பாதுகாக்கும் பொருட்டு இந்த ஆரோக்கிய வனம் அமைக்கப் பட்டுள்ளது. 


சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரோக்கிய வனம் மனித வடிவில் யோகா முத்திரையில் அமர்ந்து இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகளும், தாவரங்களையும் கொண்டுள்ளது. மேலும் ஆரோக்கிய வனத்தில் நீருற்றுகள், யோகா மேடை, நீர் கால்வாய், தாமரை குளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத தாவரங்களின் முக்கியத்துவத்தையும் அதன் நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில் ஆரோக்கிய வனம் உருவாக்கப் பட்டுள்ளதாக ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. தாராளமாக அனைத்து தரப்பு மக்களும் இந்த வனத்தை பார்வையிட வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News