அசாமில் அதிர்ச்சி: பங்களாதேஷில் இருந்து வரும் சட்டவிரோத சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!

அசாமில் அதிர்ச்சி: பங்களாதேஷில் இருந்து வரும் சட்டவிரோத சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!

Update: 2021-01-05 12:57 GMT
இந்தியா மற்றும் பங்காளதேஷ் இடையேயான எல்லை பாதுகாப்பு பிரச்சனை பதற்றமாக இருந்து கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது அசாம் மாநிலத்தில் க்ரீம்கஞ் மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதையை அசாம் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. 

இந்த சுரங்கப்பாதையானது தற்செயலாகக் கடத்தல் வழக்கு குறித்த விசாரணையை மேற்கொண்டிருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையானது இந்தியா மற்றும் பங்களாதேஷை பிரிக்கும் பாதையில் எல்லை பாதுகாப்புப் படையினர் அமைத்த வேலிக்கு அடுத்து அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதையை பங்களாதேஷை சேர்ந்த கடத்தல்காரர்கள் மற்றும் ஊடுருவியவர்கள் இந்தியாவில் ஊடுருவப் பயன்படுத்தி உள்ளனர்.

Full View

இந்த சுரங்கப்பாதையானது கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு கால்நடை கடத்தல் காரர்களைக் கண்டுபிடிக்கும் போது கண்டறியப்பட்டது. கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து அந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தற்போது க்ரீம்கஞ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுரங்கமானது நீண்ட காலமாகக் கடத்தல்காரர்கள் மற்றும் சமூக விரோத அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது குறித்துக் கூட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது என்று க்ரீம்கஞ் SP மயங் குமார் தெரிவித்தார். 

இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடித்து நாடு கடத்த முயற்சி எடுத்து வருகின்றது. ஆயிரக்கணக்கான பங்காளதேசிகள் சட்டவிரோதமாக அசாமில் குடியேறி உள்ளனர். மேலும் அவர்களை மாநிலத்தில் மக்கள் தொகைக்கு அச்சுறுத்தலாக உள்ள அவர்களை அடையாளம் காணுவதே குடியுரிமைக்கான தேசிய அமைப்பின்(NRC) முக்கிய கடமையாகும். இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 2019 இல் சட்டவிரோதமாகக் குடியேறிய 21 பங்காளதேசிகளை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பினர்.

Similar News