ஒரு மாநிலமே அழிவின் பிடியில்! சாபம் காரணமா?

Update: 2022-05-19 11:14 GMT

அசாம் மாநிலத்தின் நிலப்பரப்பு மெல்ல மெல்ல ஆற்றுக்குழா கரைந்து கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஐந்து கிலோ மீட்டர் அகலம் மட்டுமே கொண்டிருந்த பிரம்மபுத்திரா ஆற்றின் கரை, தற்போது அகலம் சுமார் 15 கிலோ மீட்டர் ஆகும். 

அப்படியென்றால், எந்த அளவுக்கு ஆற்றின் கரைகள் அரிக்கப்பட்டு நீருக்குள் சென்றுள்ளது என்பதை பார்க்க வேண்டும். 2010 முதல் 2015க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் 880கிராமங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 

அதே நேரத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் எண்ணிக்கையின் அதிகரித்துள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் அசாமில் வெளுத்து வாங்கியுள்ளது/

அதன் காரணமாக ஆறுகளில் மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால், 20 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 2 லட்சம். அத்துடன் அங்கு வெள்ளத்தால் மூழ்கி, பாதிக்கப்பட்டது 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் என தெரிய வந்துள்ளது. 


Similar News