இந்து மதக்கடவுள் 'விநாயகரை' காலணியால் மிதித்து அவமானப்படுத்திய இஸ்லாமியர் கைது !

அசாம் மாநிலம், கர்பி அங்லாங் மாவட்டம் அருகே இந்து மதக்கடவுள் விநாயகரை செறுப்பு காலால் மிதித்து அவமதித்த முஸ்லீம் இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Update: 2021-10-24 01:56 GMT

அசாம் மாநிலம், கர்பி அங்லாங் மாவட்டம் அருகே இந்து மதக்கடவுள் விநாயகரை செறுப்பு காலால் மிதித்து அவமதித்த முஸ்லீம் இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அசாம் மாநிலம், கிழக்கு கர்பி அங்லாங் மாவட்டம் அருகே உள்ள டென்கலங்சோ என்ற கிராமம். இக்கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் இந்து மதக்கடவுளான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இது மிகவும் புராதானமான இந்த விநாயகர் சிலையை அனைத்து மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர்.

இதனிடையே, அந்த மலைப்பகுதிக்கு தனது நண்பர்களுடன் அர்பஸ் கான் என்ற முஸ்லீம் இளைஞன் இந்து மதக்கடவுள் விநாயகரை அவமதிக்கும் விதமாக தனது காலணி அணிந்த காலால் விநாயகர் சிலையை மிதித்துள்ளான். இதனை அங்கிருந்த மற்றவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை அர்பஸ் கான் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளான்.

இந்துக்கள் புனிதமாக மதிக்கின்ற விநாயகர் சிலையை முஸ்லீம் இளைஞன் அர்பஸ் கான் அவமதித்து வெளியிட்ட புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்தது. இதனையடுத்து விநாயகர் கோயில் கமிட்டி சார்பில் பைதலங்சோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து முஸ்லீம் இளைஞன் அர்பஸ் கானை போலீசார் நேற்று (அக்டோபர் 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News