சட்டசபை தேர்தல்.. 5 மாநிலங்களில் பணிகளை முடுக்கிவிட்ட தேர்தல் ஆணையம்.!

சட்டசபை தேர்தல்.. 5 மாநிலங்களில் பணிகளை முடுக்கிவிட்ட தேர்தல் ஆணையம்.!

Update: 2020-12-18 07:09 GMT

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைகிறது. எனவே, மேற்கண்ட 5 மாநிலங்களில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. அதன்படி, தேர்தல் கமிஷன் துணை கமிஷனர் சுதீப் ஜெயின் கடந்த 16ம் தேதி இரவு மேற்கு வங்காளத்துக்கு சென்றார். நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

2 நாட்கள் அவர் மேற்கு வங்கத்தில் தங்கி இருந்து பணிகளை கவனிப்பார். சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகள் பற்றி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தேர்தலின்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் விவாதிக்கிறார். அது போன்று தேர்தல் கமிஷன் செயலாளர் உமேஷ் சின்கா, அடுத்த வாரம் தமிழகத்துக்கு வருகிறார். தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக, திமுக இடையே எப்போதும் நேரடி போட்டி நிலவும். ஆனால் இந்த முறை ரஜினி புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

அதே போன்று மற்ற கட்சிகளான, பாஜக, பாமக, தேமுதிக, போன்ற கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது, என்ன மாதிரியான பிரச்சாரத்தை செய்வது என்று நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனை செய்து வருகின்றனர்.
 

Similar News