விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3500 கோடி இழப்பு - வர்த்தக அமைப்பான அசோசம் தகவல்

விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3500 கோடி இழப்பு - வர்த்தக அமைப்பான அசோசம் தகவல்

Update: 2020-12-17 07:45 GMT

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால், 2400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்க முடியாததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று விவசாயிகள் போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு 3500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக வர்த்தக அமைப்பான அசோசம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் மறியலில் ஈடுபடுவதால் சரக்குகளை கொண்டு செல்வதற்கான காலம் அதிகரித்து செலவு 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கடந்த 20 நாட்களில், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் சுமார் 5,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பிற வணிக நடவடிக்கைகள் தடைபட்டதாக கூரியுள்ளது.

இந்த போராட்டங்கள் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் பொருளாதாரங்களுக்கு பெரும் சிக்கலை தருவதாகக் கூறி, புதிய வேளாண் சட்டங்கள் மீதான எதிர்ப்புக்கு தீர்வு காணுமாறு தொழில்துறை அமைப்பான அசோசம் விவசாய அமைப்புகளை வலியுறுத்தியது.

"தினசரி 3,000 முதல் 3,500 கோடி இழப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போக்குவரத்து சீர்குலைவு ஆகியவற்றால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோசம் தலைவர் நிரஞ்சன் ஹிரானந்தனி கூறுகையில், “பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும்  ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பொருளாதாரங்களின் அளவு சுமார் 18 லட்சம் கோடி. தொடர்ச்சியான விவசாயிகளின் போராட்டம் மற்றும் சாலைகள், டோல் பிளாசாக்கள் மற்றும் ரயில்வேக்களை முற்றுகையிட்டதால், பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது வரும் நாட்களில் பொருளாதாரத்தை பாதிக்கும், மேலும் கொரோனா  காரணமாக பொருளாதார சுருக்கத்திலிருந்து தொடர்ந்து மீள்வதற்கு தடையாக இருக்கலாம்.

ஏற்றுமதி சந்தையை கணிசமாக பூர்த்தி செய்யும் ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், மிதிவண்டிகள், விளையாட்டு பொருட்கள் போன்ற தொழில்கள் தங்கள் ஆர்டர்களை நிறைவேற்ற முடியாது என்று ஹிரானந்தனி கூறினார்.  ஒரு மதிப்பீட்டின்படி, டெல்லிக்கு வரும் பொருட்களில் சுமார் 30 முதல் 40% வரை விவசாயிகளின் போராட்டத்தால்  பாதிக்கப்பட்டுள்ளது,

Similar News