ஜம்மு-காஷ்மீரில் அதிரடியாக 100 பயங்கரவாதிகளை நடப்பாண்டில் வேட்டையாடிய பாதுகாப்பு படையினர்

ஜம்மு-காஷ்மீரில் நடப்பாண்டில் 30 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-06-14 01:15 GMT

ஜம்மு-காஷ்மீரில் நடப்பாண்டில் 30 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 லஷ்கர் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்த ஆண்டு இதுவரை வெவ்வேறு நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் 200 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத சம்பவங்களுக்கும் பண்டிட் இனத்திற்கும் எதிரான தாக்குதல்களும் அதிகரித்திருப்பதால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன தற்பொழுது 83 லஷ்கர் பயங்கரவாதிகள் பள்ளத்தாக்குகளில் பதுங்கி உள்ளனர். இது தவிர காஷ்மீர் பள்ளத்தாக்கில் 30 ஜெய்ஸ் பயங்கரவாதிகளும், 38 ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பதுங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளிட்ட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News