ஸ்ரீசைலம் கோவிலில் பைபிள் விநியோகிக்க முயற்சித்ததால் பரபரப்பு.!

ஸ்ரீசைலம் கோவிலில் பைபிள் விநியோகிக்க முயற்சித்ததால் பரபரப்பு.!

Update: 2021-01-08 06:30 GMT

ஜோதிர்லிங்க திருத்தலங்களுள் ஒன்றான ஸ்ரீசைலத்தில் முஸ்லிம்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்று ஒரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது மிஷனரிகள் பைபிள் விநியோகிக்க வந்ததாக மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. தரிசனம் செய்ய கையில் பைபிளுடன் நின்று கொண்டிருந்தவர்களை பார்த்த பக்தர்கள் கோவில் பாதுகாப்பு ஊழியர்களிடம் புகார் அளித்த பின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங், ரசாக் என்பவர் ஸ்ரீசைலம் கோவில் கான்ட்ராக்டராக உள்ளார் என்றும் அவர் மூலம் கோவிலுக்குள் பல முஸ்லிம்கள் கடைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதற்கு ஸ்ரீசைலம் எம்.எல்.ஏ சில்ப சக்ரபாணி ரெட்டி உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

 

மேலும் ரசாக்கின் சகோதரர் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி என்றும் எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரசாக் கோவில் நிர்வாகத்தை கையில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ரசாக்கின் மனைவி இந்து என்று கூறப்படுகிறது. இவர் கோவில் கோசாலை யின் மேற்பார்வையாளராக பணி புரிகிறார். இவர் கோசாலையில் இருக்கும் பசுக்களை இறைச்சிக்காக கொல்ல உதவுகிறார் என்றும் கூறப்படுகிறது.

 

கோவிலுக்கு பூஜை செய்ய மலர்கள் எடுத்துச் செல்லும் கூடையில் மட்டன் வைத்து எடுத்துச் சென்றதாக ரசாக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மண்ணில் இருந்து ஒரு சிவலிங்கம் கிடைத்தது. இதைத் தோண்டி எடுத்த போது அடியில் தங்கக் காசுகள் இருந்ததாகவும் அதை ரசாக் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

இது ஒரு புறம் இருக்க, மத வழிபாட்டுத் தலங்களில் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் மதத்தைப் பரப்புவதை தடுக்க 2007ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இருக்கையில், கிறிஸ்தவர்கள் ஸ்ரீசைலத்தில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் அமைந்துள்ள நந்தி மலை பகுதியில் மதப் பிரச்சாரம் செய்ய தடை இருக்கும் போது அருகே உள்ள பூங்காவில் பைபிள் வாசித்து அதை புகைப்படம் எடுத்தவர்கள் 4 பேர்‌ அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

 

இதில் பீட்டர் என்பவர் முன்னர் ஒரு முறை பைபிள் விநியோகிக்க முயன்றதாகவும் தனது பைக்கில் மத சம்பந்தப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு வாகனத்தில் பைபிள் வசனங்கள் அடங்கிய பேனரைக் கட்டிக் கொண்டு மதப் பிரச்சாரம் செய்ததாக சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

அந்த வாகனத்தில் தற்போதைய முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது தந்தை ராஜசேகர ரெட்டி ஆகியோரின் புகைப்படங்களும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நந்தி மலை முழுவதுமே கருவறையின் ஒரு பகுதியாக கருதப்படுவதால் அங்கு பிற மதத்தினர் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என இரு ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு நடந்து கொள்வது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.hindupost.in/dharma-religion/abrahamics-target-hindu-srisailam-mandir-andhra/amp/?__twitter_impression=true

Similar News