பெண் கான்ஸ்டபிளைக் கொல்ல முயற்சி! சட்டவிரோத இறைச்சிக் கூட கும்பலின் அட்டூழியம்!

பெண் கான்ஸ்டபிளைக் கொல்ல முயற்சி! சட்டவிரோத இறைச்சிக் கூட கும்பலின் அட்டூழியம்!

Update: 2021-01-16 15:41 GMT

நாட்டில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மற்றும் மேவாட்டில் சட்டவிரோதமாக இறைச்சிக் கடைகள் நடத்துபவர்கள், பசுக்களைப் படுகொலை செய்பவர்கள் தொடர்ந்து காவல்துறை மேல் தாக்குதல் நடத்தி வருவது தொடரும் செயலாகவே இருக்கின்றது.

அதனை உறுதி செய்யும் ஒரு சம்பவமாக உத்தரப் பிரதேசத்தில் மீரட் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த இறைச்சிக் கடையைச் சோதனை செய்ய முயன்ற காவல்துறையை உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர். அந்த குற்றவாளிகள் பெண் கான்ஸ்டபிளை கழுத்தில் கயிறு கட்டி இழுத்துக் கொள்ளவும் முயற்சி செய்தியுள்ளனர். மேலும் அவர்கள் காவல்துறை மேல் கற்களை வீசி தாக்கியுள்ளனர். 

இந்த சம்பவமானது மாவான பகுதியில் உள்ள சாத்லா கிராமத்தில் நடந்துள்ளது. பெண் கான்ஸ்டபிள் தாக்குதலுக்கு உள்ளான போது மற்ற காவல்துறையினர் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் பிற காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. 

மேலும் சாத்லா கிராமத்தைச் சேர்ந்த உவைஸ், மெஹராஸ், ஆப்பிரின்,  வாசிம் குரேஷி, பிரோஸ் குரேஷி, இக்ராம் குரேஷி, சயிட் குரேஷி, அபாக் குரேஷி, உள்ளிட்ட பத்து குற்றவாளிகள் மீது தாக்குதல் நடத்தியது, கொலை முயற்சி, பசு படுகொலை மற்றும் பிற சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் உட்பட மூன்று குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது. 

கிராம மக்கள் காவல்துறை தாக்கவில்லை என்றும் மற்றும் அங்கு இறைச்சி பேக் செய்யப்பட்டு வருகின்றது என்று கூறுகின்றனர். இருப்பினும் காவல்துறை அங்கிருந்து, 300 Kg இறைச்சி, கொலை செய்வதற்கான ஆயுதங்கள் மற்றும் கத்திகள், மூன்று வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளது. 

இதுபோன்று ஆபத்தான மாட்டிறைச்சி மாஃபியா நாட்டில் இன்னும் தொடர்கிறது மற்றும் இது சர்வதேசத்தில் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு வருகின்றது. மேலும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாத கும்பல்களுடனும் இது தொடர்பில் இருக்கின்றது. 

Similar News