மின்சார வாகன தேவைக்காக முக்கிய கனிமங்கள் இறக்குமதி - இந்தியாவுடன் ஆஸ்திரேலியா முக்கிய ஒப்பந்தம்

லித்தியம் உள்ளிட்ட பல முக்கிய கனிமங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஆஸ்திரேலியா.

Update: 2022-07-14 01:55 GMT

லித்தியம் உள்ளிட்ட பல முக்கிய கனிமங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஆஸ்திரேலியா.

முக்கிய கனிமங்களுக்கான திட்டங்கள் மற்றும் கனிம ஏற்றுமதி துறையில் தங்கள் தங்கள் நட்பை வளர்க்க இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆறு நாள் சுற்றுப்பயணமாக சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆஸ்திரேலியா நாட்டின் வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா அமைச்சரான மெடலின் கிங்கை சந்தித்தார்.

இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்கள் மற்றும் சோலார் பேனல்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் பாட்டரி தயாரிப்பதற்கும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கு முக்கியமான கனிமங்களை வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப இந்தியா பூர்த்தி செய்வதற்கு உதவுவதற்கு ஆதாரங்கள் ஆஸ்திரேலியாவிடம் உள்ளன எனவும் அதனை இந்தியாவில் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் மிகுந்த உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் பயன்பாடு இன்னும் ஐந்து ஆண்டுகளில் குறைக்கப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Source - News 18 Tamil Nadu

Similar News