வேளாண் சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்: அகில இந்திய பாஜக அறிவிப்பு.!

வேளாண் சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்: அகில இந்திய பாஜக அறிவிப்பு.!

Update: 2020-12-13 17:45 GMT

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடை பெற்ற இடைதேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பொது தேர்தல் இவற்றில் அதிக இடங்களை பாஜக பிடித்துள்ளதால் இந்த வெற்றியை புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கலாம் என பாஜக தேசீய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். 

மேலும் இந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும், மோடி அரசு விவசாயிகளுக்கு செய்த நன்மைகளை கிராமங்கள் தோறும் விவசாயிகளிடம் எடுத்துச் செல்வோம் என்றும் கூறினார்.  

இந்நிலையில் சட்டங்கள் குறித்த உண்மை நிலையை தெரிவிக்கவும், சந்தேகங்களை போக்கவும், நன்மைகள் குறித்து விளக்கவும்தேசிய அளவில் 700 மாவட்டங்களில் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய அகில இந்திய பாஜக திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக கிராமங்களில் மக்களிடையே இந்த வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துப் பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

பொதுக்கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு, கிராமம் கிராமமாக பிரச்சாரம் உள்ளிட்டவற்றை தேசிய அளவில் 700 மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வேளாண் சட்டங்கள் மூலம் இடைத்தரகர் இல்லாமல் வேளாண் பொருட்களை விவசாயிகள் மேலும் பல வழிகளில் விற்பனை செய்ய முடியும் என்று அரசு வாதிடுகிறது, இந்த நிலையில்தான் புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக நாடெங்கும் நடத்த முடிவெடுத்துள்ளது. 

இந்நிலையில் 'விவசாயிகள் நண்பன் மோடி' என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் தமிழகத்தில் ஆயிரம் பொதுக் கூட்டங்கள் நடத்தவுள்ளோம் என்றும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

Similar News